“தமிழர் நாடு” - நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் தோழர் பெ.மணியரசன் அவர்களின் உரை
“முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் “தமிழர் நாடு” - நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களின் உரை.
தமிழ்த்தேசிய இணைய இதழ்
//“தமிழர் நாடு” - நூல் வெளியீட்டு விழா நிகழ்வில்//
ReplyDeleteஐயா,
இதை,"“தமிழர்நாடு” - நூல்வெளியீட்டுவிழாநிகழ்வில்"
என்றேயெழுதவேண்டும். அப்படியெழுதுவதே இலக்கணத்தின்படியும் சொல்லவந்த பொருளின்படியும் சரி.
'தமிழரது நாடு' எனச்சொல்வதில் ஆறாம்வேற்றுமைக்கான உருபாகிய 'அது' என்பது வெளிப்பட்டுவந்துள்ளது. இதை ஒன்றாய்ச்சேர்த்து ஒரு தொடர்மொழியாக்கினால் அது 'தமிழரதுநாடு' என ஒருசொல்லாகும். இப்படி அது ஒருசொல்லானபின், அதிலுள்ள 'அது' என்னும் உருபை நீக்கமுடியும். அப்படி அந்த உருபை நீக்கினால், 'தமிழர்நாடு' என ஒருசொல்லாகத்தான்வருமேயன்றி, 'தமிழர் நாடு' என வராது.
இவ்வாறு உருபை நீக்கி அதன் இருபுறமும்வரும் இரண்டுசொற்களையும் சேர்த்து ஒருசொல்லாயெழுதுவது 'தொகைநிலைத்தொடர்' எனப்படும்.
('தமிழரது நாடு' என இருசொல்லாயிருக்கும்போது உருபை நீக்கமுடியாதென்பதை அறிக.)
இதுபோலவே, 'நூல் வெளியீட்டு விழா நிகழ்வில்' என்பதிலும், 'நூல்வெளியீடு' என்பது 'நூலினதுவெளியீடு'என, ஆறாம்வேற்றுமையையும், 'வெளியீட்டுவிழா' என்பது 'வெளியீட்டுக்கானவிழா' எனவும் விழாநிகழ்வு' என்பது 'விழாவுக்கானநிகழ்வு எனவும் இவை நான்காம்வேற்றுமையையும் அதற்கான பயனையுங்கொண்டவை.
இப்படி உருபைமட்டுமோ உருபையும் பயனையுமோ மறைத்தெழுதுவதையெல்லாம் 'தொகைச்சொல்' என்கிறோம். ஆனால் இன்றைய எழுத்தில் இந்த தொகைச்சொற்களை பிரித்துவிடுகிறோம்.
தொல்காப்பியர், 'எல்லாச்சொல்லும் ஒருசொன்னடைய' என்கிறார்.
ஆனால் நாமோ அவற்றை இருசொன்னடையவாயெழுதிக்கொண்டிருக்கிறோம்.
தமிழரது நாட்டுக்காக போராடும் நாம் அவரது மொழிக்காகவும் போராடத்தானேவேண்டும்?