தொடர்ந்து எட்டாம் நாளாக பொழிச்சலூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நிவாரணப்பணி! - தோழர் பெ. மணியரசன் நேரில் ஆய்வு!
தொடர்ந்து எட்டாம் நாளாக பொழிச்சலூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நிவாரணப்பணி! தலைவர் தோழர் பெ. மணியரசன் நேரில் ஆய்வு!
சென்னை மாநகரையொட்டி அமைந்துள்ள, காஞ்சிபுரம் மாவட்டப் பகுதியான பொழிச்சலூர் விநாயகா நகர் பகுதியில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் தொடர்ந்து எட்டாம் நாளாக முகாமிட்டு, நிவாரணப் பணியாற்றி வருகின்றனர்.
வெள்ளம் காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்கொண்ட பொழிச்சலூர் விநாயகர் நகர் பகுதியை மட்டும் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து, அங்குள்ளவர்களுக்கு அனைத்து உதவிகளும் சீராகக் கிடைக்க தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
எட்டாம் நாளான இன்று, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொழிச்சலூருக்கு நேரில் வருகை தந்து வெள்ளத்தால் வீடிழந்த பகுதிகளைப் பார்வையிட்டார். முற்றிலும் வீடுகள் இழந்த குடும்பத்தினருக்கு அவர்களது இல்லத்திற்கே நேரில் சென்று சமையல் பாத்திரங்களை அவர் வழங்கினார்.
கழிவுநீர் சேறும் சகதியுமாக உள்ள ஆறுமுகம் தெருவில் இடிந்து போன வீடுகளை பார்வையிட, இதுவரை எந்த அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் வரவில்லையென அத்தெரு மக்கள், தோழர் பெ. மணியரசனிடம் தெரிவித்தனர். மேலும், வீடுகள் மொத்தமாக இடிந்து நிற்கும் நிலையில்கூட, இன்றுவரை ஊடகங்கள் இப்பகுதியைக் கண்டுகொள்ளவில்லையே என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆறுமுகம் தெரு உள்ளிட்ட பகுதிகிளல் வீடுகள் இடிந்த மக்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.
விநாயகா நகர் பகுதியில், ஆற்றுக்கரையில் வாழும் இம்மக்கள் கொசுக்கடியில் அவதிப்படாமல் இருப்பதற்காக அனைத்து வீடுகளுக்கும் கொசுவலை, பாய், சேற்றுப்புண் மருந்து, நிலவேம்பு குடிநீர், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உடைகள் உள்ளிட்ட அடிப்படைப் பொருட்களை வீடுவீடாகச் சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மாலை, பொழிச்சலூர் - அனகாபுத்தூர் அருகிலுள்ள காமாட்சி நகர் பகுதியில், வீடு முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு, உடைமைகள் இழந்த மக்களுக்கு துணிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்க:
044-24742911, 9841949462, 9047162164
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment