பெண்களை இழிவுபடுத்தும் ஆபாசப் பாடல் எழுதி வெளியிட்ட நடிகர் சிம்பு - அனிருத் படம் எரிப்பு!

பெண்களை இழிவுபடுத்தும் ஆபாசப் பாடல் எழுதி வெளியிட்ட நடிகர் சிம்பு - அனிருத் படம் எரிப்பு! தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் ஆவேசம்!
பெண்களை இழிவுபடுத்தும் ஆபாசப் பாடல் எழுதிய நடிகர் சிம்பு - இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரைக் கண்டித்தும், அவர்களைக் கைது செய்ய வேண்டுமெனக் கோரியும், தஞ்சையில் இன்று (18.12.2015) காலை மகளிர் ஆயம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு, மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர் தோழர் ம. லெட்சுமி தலைமை தாங்கினார்.


ஆர்ப்பாட்டத்தில் நடிகர் சிம்புவையும், அனிருத்தையும் தமிழ்நாடு அரசு கைது செய்யக் கோரியும், சிம்புவின் படத்தை எரித்தும் செருப்பால் அடித்தும் மகளிர் தோழர்கள் ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.


ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை நகரம் - அமுதா, ராணி, ச.செல்வி, பு.இலட்சுமி, கலைவாணி, பூதலூர் ஒன்றியம் - கே.மீனா, க.செல்வி, சு.சுதாவணி, தெ.ரஞ்சணி, செ. சாந்தி, சி.பிரியா, சி.தமிழ் இலக்கியா, ஜோஸ்பின் மேரி உள்ளிட்ட திரளான மகளிர் தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.


தமிழ்நாடு அரசே! பெண்களை இழிவுபடுத்தும் நடிகர் சிம்பு - அனிருத் இருவரையும் கைது செய்து சிறையிலடை!

Related

மகளிர் ஆயம் 4448280099163716511

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item