நெல் கொள் முதலில் இணையதளப் பதிவைப் புகுத்தாதீர்! உழவர்களுக்குப் புதிய சுமைகளைத் திணிக்காதீர்! இணையதளப் பதிவு அறிவிப்பு நகல் எரிப்புப் போராட்டம்!
தஞ்சாவூர் – நுகர் பொருள் வாணிபக் கழகம் முன்பாக (டெம்பிள் டவர் அருகில்) 09.02.2022 புதன் காலை 10.30 மணியளவில் தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் திரு. ஜெகதீசன், அவர்கள் தலைமையில், முன்னதாக போராட்டத்தை காவிரி ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இப் போராட்டத்தில் மரு.பாரதிசெல்வன், பூதலூர் சுந்தர வடிவேல், தெட்சினாமூர்த்தி, திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முண்ணணியின் மாவட்ட செயலாளர் கலைசெல்வன், கோவலன், வள்ளுவர் கண்ணன், கன்னியாக்குறிச்சி வீரய்யைன், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தை சேர்ந்த தஞ்சை மாவட்ட செயலாளர் நா. வைகறை, பழ.இராசேந்திரன், விடுதலைச்சுடர், செழியன், இராசுமுனியான்டி, இராமு, தீந்தமிழன், திருச்சி இலக்குவன், புதுக்கோட்டை கவித்துவன், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த உழவர்கள் பாலு, குமார், மேலஉளூர் இராசேந்திரன், அம்மாப்பேட்டை கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட விவசாய பெருங்குடிகளை சேர்ந்தோர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com
Leave a Comment