ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுந்தர விமலநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

 தமிழக உழவர் முன்னணி தகவல் பலகை

=====================================

அனைத்து உழவர் பெருமக்களுக்கும் வணக்கம்,

கடந்த 27.9.2022 செவ்வாய் அன்று கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுந்தர விமலநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்


பெற்றது. உழவர்களுக்கு கொடுக்கவேண்டிய நிலுவை காப்பீட்டுத் தொகையை உடனடியாகத் தரவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் நம்முடைய தமிழக உழவர் முன்னணி சார்பில், அதன் தலைவர் திரு.எஸ்.சேகர், பொருளாளர் திரு. செழியன், துனைத் தலைவர் திரு. பாஸ்கர், செயற்குழு உறுப்பினர் கோ.அன்புச்செழியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


அதன் பிறகு நடந்த கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற உழவர் குறைத்தீர்ப்பு கூட்டத்திலும் பங்கு பெற்றனர். அக்கூட்டத்தில் நம்முடைய செயற்குழு உறுப்பினர் அன்புச் செழியன் அவர்கள், பட்டீச்சுரம் யூரியா சிக்கலையும், சோழன்மாளிகை வாய்காலில் இணையும் பட்டா கன்னி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் கோட்டாட்சியருக்கு வேண்டுகோள் விடுத்தார்.


அதனை ஏற்ற கோட்டாட்சியர் அவர்கள் 28.9.2022 அன்று தலைமை நில அளவையர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியை உடனடியாக அனுப்பி வைத்தார்கள். அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பட்டா கன்னி வாய்க்காலை எடுப்பதற்காக கோள் ஊன்றி வைத்தனர். 


பாதிக்கு மேல் வயலில் நெல் அறுவிடையக்கு தயார் நிலையில் இருந்ததால், அறுவிடை முடிந்த பிறகு அளந்து தருகிறோம் என்று சொல்லி அதிகாரிகள் சென்றனர்.

இன்று 29.9.2022 செயற்குழு உறுப்பினர் அவர்கள் மேற்படி வயலில் அறுவிடை முடிந்துவிட்டதை  AD யிடம் தெரிவிப்பதற்காக குடந்தை சென்றுள்ளார்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.